உரையாடலின் ஒரு பகுதி 76
அதாவது அறிவானை அறியும் போது அறியப்படுபவன் அறிவானாகவே ஆகிறான். தன்னை அறியும் உபாயம் அறிந்து தன்னை அறியும் யாரும், தன் தலைவனையும் அறிந்து விடுகிறார்கள். அவர் அப்போது பிரபஞ்ச அறிவு உடையவராகின்றனர். இது பள்ளியில் கிடைக்காது இது கூவி, கூவி விற்கப்படும் பொருளும் அல்ல, இதை அடைய நம் முந்தய வினையும் ஒத்துழைக்க வேண்டும்.
