மொழி 3
சொல் _செவிக்கு புலனாகும் போது ஒலியாகவும் கண்ணுக்கு புலனாகும் போது எழுத்து வடிவில் இயங்குகிறது. இறைவன் விதியை வகுத்து எழுதி படைத்தான். மனிதன் எழுதி விதியை படைத்தான். கம்பன், காளிதாசன், வால்மீகி, திருவள்ளூவர், பாரதி போன்றோர் இந்த வகையை சார்ந்தவர்கள். இறைவன் உண்டாக்கிய நம் தலைஎழுத்தின் வரியும், வடிவமும் தெரியவில்லை, அதன் பொருளும் தெரியவில்லை. ஆனால் மண், உலகிற்கு மொழி படைத்துக் கொடுத்த மனிதர்கள் தாங்கள் வகுத்த விதிக்கு இலக்கணம் எனும் பெயரும் சூட்டி உள்ளனர்.
