வாழ்க்கை. 4
நாம் அறமுடன் வாழ்ந்து பொருளை சேர்த்தால் இன்பமுடன் இருந்து வீடு பேற்றை அடையலாம். இது வாழும் வகை, இப்படி எல்லோராலும் வாழ முடிகிறதா என்ற வினா நமக்குள் எழும்போது இல்லையென்றுதான் சொல்ல தோன்றுகிறது, இப்போதைய சூழ்நிலை எப்படி வேண்டுமானாலும் வாழ்ந்து பொருளை சேர்ப்பது நோக்கமாகிவிட்டது. அப்படி அடிப்படை மாறும் போது எல்லாமே மாறிதானே போகும். வினைகளை தீர்க்க எடுத்த இந்த ஜென்மானது வினைகளை மேலும், மேலும் பெருக்கிக் கொள்ளவே அமைந்து விட்டது.
