உலக பூமி நாள் ” 1

நாம் அதிகப்பட்சமாக 100 ஆண்டுகள் வாழும்  பூமிப்பந்தை அப்படியே விட்டுச்செல்லுகிறோமா என்றால் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். அவரவர்களால் முடித்த அளவு நாசப்படுத்தியே வருகிறோம். இயற்கைவளம்–கனிம வளம் மிக்க பூமியை காடுகளை அழித்து நகரங்களை உருவாக்கி வாழ்கிறோம். சக வாழ்விகளான விலங்குகள்–பறவைகளை வாழ வழியில்லாமல் செய்கிறோம். பருவநிலை மாற்றத்தால் பூமியின் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டு பூகம்பம், சுனாமி,வெள்ளம், வறட்சி, பனிப்பாறை உருகுதல் போன்றவை அடிக்கடி நிகழ்கின்றன. இந்த இயற்கை சுழற்சியில், பூமி அவ்வப்போது, நினைவுப்படுத்துவது போல இயற்கை…