கணவன், மனைவிக்கிடையே

கணவன், மனைவிக்கிடையே எப்போதும் கல்யாணம் ஆகாத காதலர்களுக்கு இருக்கும் ஈர்ப்பு இருக்க வேண்டும். மனம், அதன் நினைவுகளில் சஞ்சரிக்கும் போது அதற்கு சமுதாய கோட்பாடுகள் நியாய அநியாய வேறுபாடுகள் எதையும் கண்டு கொள்வதில்லை. தன் இஷ்டத்திற்க்கு அது பயணத்தை தொடரும். அந்த பயணத்தில் எண்ணங்கள் பூவாய் மலரலாம். வேதனைகள் முள்ளாய் குத்தலாம் எதையுமே மனம் பொருட்படுத்தாது. அது தான் மனம் அதனால் தான் அது மனம் மனதை கட்டுபடுத்த எந்த உபகரணமும் சமுதாயத்தில் கண்டு பிடிக்கவில்லை.