மனிதர்களுடைய ஒட்டம்

மனிதர்களுடைய ஒட்டம் எதை நோக்கி ஒரே வார்த்தையில் சொல்வதனால் இறப்பை நோக்கி நிலை இப்படி இருக்க பெருமை பேச பெருமைபட என்ன இருக்கிறது. என்ன செய்தாலும் முடிவு மரணம் என்பதை தெரிந்து, புரிந்து கொண்டவனுக்கு வியாதிகளும், முதுமையும் மனிதனை வேட்டையாடுவதை புரிந்து கொள்ள முடியும். அப்படி புரிந்து கொண்டவன் வெற்றி எனும் போதைக்கு அடிமையாகாமல் திருப்தி எனும் வஸ்துக்குள் நுழைய ஆயத்தமாகிறான் அதாவது எதனோடும் ஒட்டாது ஆனால் ஒட்டி என்ற நிலையை நோக்கி நகர்ந்து விடுகிறான்.