உடனே மனது ஏற்காது. ஆனால் உண்மை. 2
உங்களின் குழந்தைகளைப் பற்றி கவலைப்படாதிருங்கள். அவர்களின் வாழ்க்கை அவர்களுக்கு விதிக்கப்பட்ட விதிப்படிதான் அமையும். அதில் நீங்கள் எந்த மாற்றத்தையும் செய்வதற்கு வழியில்லை. நீங்கள் சேர்த்தவற்றை அவர்களுக்கு கொடுக்கலாம். அறிவுறைகள் வழங்கலாம். அவ்வளவுதான் உங்களால் இயலும். சம்பாதிக்கிறேன் என்று பணத்தைத் தேடி அலையாதீர்கள். பங்குச் சந்தைப் பக்கம் தலை வைத்தும் படுக்காதீர்கள். இருப்பதையும் இழந்துவிட்டால், கவலைப்பட்டு் உங்கள் ஆரோக்கியம் கெட்டுவிடும். பணம் ஆரோக்கியத்தை மீட்டுத் தராது. ஆயிரம் ஏக்கர் விளைநிலம் இருந்தாலும் நாளொன்றிற்கு அரைக் கிலோ அரிசிக்கு மேல்…