இரத்தத்தைச் சுத்தம் செய்யும் வழி 2

இரத்தத்தில் எத்தனை பொருள் இருக்கிறது? அவை என்னனென்ன என்பதைப் பார்ப்போம். இரத்தத்தில் மொத்தம் நிறைய பொருள் இருக்கிறது. ஆனால் அதை ஐந்து வகையாக சுலபமாகப் பிரிக்கலாம். அவை நிலம், நீர், நெருப்பு, காற்று மற்றும் ஆகாயம்.1. நிலம் [உணவு] [மண் நாம் சாப்பிடும் உணவு இரத்தமாக மாறுகிறது என்று பலர் கூறுவார்கள். ஆனால் அப்படிக் கிடையாது. சாப்பிடுகிற உணவு வாயில், வயிற்றில் குடலில் ஜீரணமாகி அதில் உள்ள சத்து பொருட்கள் இரத்தத்தில் கலக்கின்றன.