நவீன மனிதர்கள் தோற்றம் 3

மரபணு ஆதாரங்களும் ஆப்பிரிக்காவே மனித குலத்தின் தாய்மடி என்பதை உறுதிப்படுத்துகின்றன. அப்படியானால் இன்றைக்கு உலகில் வாழும் மனிதர்களிடையே இத்தனை நிறங்கள், தோற்ற வேறுபாடுகள், உயர வேறுபாடுகள் எப்படி வந்தன? எனக் கேட்கலாம், ஒரு குழு தன் தாய்நிலத்தில் இருந்து இடம் பெயர்ந்து வேறொரு நிலப்பகுதியில் குடியேறிய பிறகு, புதிய நிலத்தில் நிலவும் கால நிலை, தட்பவெப்பநிலை, புவியியல் தன்மை ஆகியவற்றுக்கு ஏற்ப தகவமைத்து வாழ தொடங்குகிறது.