பெற்றோர்களின் விருப்பமே 2
குழந்தைகள் எங்கு செல்கிறார்கள், எவர்களுடன் பழகுகிறார்கள் என்பது போன்ற விஷயங்களில் கண்டிப்பும், கண்காணிப்பும் இல்லாது போவது தவறுகளை கண்டிக்காமல் பாசம் மட்டும் மிகைந்து நிற்கும் பெற்றோர்கள் ஒரு நாள் கவலையும், கண்ணீரும் விட்டே தீர வேண்டும். அடங்கி இருப்பது அடிமை தனம் அல்ல என்பதை பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு கண்டிப்புடனும், உறுதியுடனும் சொல்லி கொடுத்துவிட வேண்டும். ஒரு தவறு செய்த பிறகு அதை திருத்தாதவன் இன்னுமொரு தவறு செய்தவனாகிறான் இது தொடர்ந்தால் வாழ்க்கையே தவறாகி விடுகிறது.