அனுபவ வைத்திய தேவ ரகசியம் இரண்டாவது காண்டம் 75
காலசங்கிய பிரமாணானி இருபத்தோராயிரத்தி அறு நூறு( 21,600) சுவாசமானது இரவும், பகலும் ஒடுகின்றது இதற்குதான் பிராணன் என்று பேர், இதுகாலபிராப்தியால் நாசம் சம்பவிக்கின்றது. சரீரம் என்கிற வீட்டில் ரக்ஷகப்படுகின்றது, உள்புரமாக மூச்சானது பத்து அங்குலமும் மூச்சு வெளியில் விடும்போது பனிரெண்டு அங்குலமும், போகின்றது ஆகையால் மனது நிறுத்தி வருதலும், போதலும் சமானமாயிருந்தால் காலதரிசனமாகா. சிரஞ்சீவியாயிருப்பான். காலபேதத்தால் வாத பித்த சிலேஷமென்கிற தாதுவினால் தேகத்தின் சகல குணங்களும் நிச்சயப்படுகின்றது.