கோள்களின் கோலாட்டம் -1.26 .4 – ஆம் – பாவத்தின் முக்கிய விதிகள் 39
4 – இல் பாவர், 4 – க்குரியவர் பாதகாதிபதி சாரம் பெற்று பாவரால் பார்க்கப்பட்டால், தாய்க்கும், ஜாதகனுக்கும் அடிக்கடி வாக்குவாதம் ஏற்படும். தாயை ஈனமான வார்ததைகளை சொல்லி வேதனைப்படுத்துவார். அதை துச்சமென நினைத்து தாய் ஜாதகருக்காக கடைசி வரையில் போராடுவாள். 4 – க்குரியவர் பாதகம் பெற்று, 12 – க்குரியவர், 4 – இல் அமர்ந்து பாதகாதிபதியாலும், 6 – க்குரியவராலும் பார்க்கப்பட்டால், இருதயம், மார்பு போன்றவைகளில் நோய் ஏற்பட்டு அறுவை சிகிச்சை பெறுவர்.…