உரையாடலில் ஒரு பகுதி 37
பிராணணின் செயல்பாட்டால் உடலில் நோய் ஏற்படவும் நோய் குணப்படுத்தவும் முடியும் அது போல மன வலிமையையும் மன தளர்ச்சியையும் அடைய முடியும். பிராணணின் செயல்பாடு சரியாக இல்லையென்றால் உடல் நோய்வாய்படுகிறது. உடல் நோய்வாய்பட்டால் மனம் தளர்ந்து சோர்ந்துவிடுகிறது. மனம் சோர்ந்து விட்டால் புத்தி தெளிவாய் இருப்பதில்லை, தெளிவில்லாத புத்தியின் செயல்கள் நம் வாழ்க்கைக்கு பெரும் கேடு விளைவிக்கின்றது.