மனிதன் இன்றைய கால கட்டத்தில் 4
தலையீடு அல்லது பங்களிப்பு என்பது உறவுகளினால் உண்டாகும், கோபம், வெறுப்பு, பயம், ஆசை, வேதனை, வருத்தம் போன்றவைகளே நாம் எப்போதும் ஒருவரை ஒருவர் சார்ந்தே இருக்கின்றோம். தனியே நம்மால் இருக்க முடியாது. அதனால் நம்மை பொறுத்தவரை உறவு என்பது இன்றியமையாதது. ஆனால் அது ஒரு விதத்தில் அர்த்தமில்லாதது. காரணம் நம் மனம் துவள்வதும், கலங்குவதும், உறவுகளினாலேயே அதனாலேயே நம்முடைய வாழ்நாளில் சோகமான பகுதி என்பது அதிக அளவு ஆக்கிரமித்து கொண்டுள்ளது.