செவ்வாய் 1

ஆட்சி மன்றத்தில் உள்ள அமைச்சர்களைப் போன்றவர்களே ஜாதகத்தில்உள்ள கிரகங்கள். செவ்வாய் லக்கினத்தில் நின்றிடில் கோபகுணம், விரோதம் கொண்ட இதயத்தினராய் இருப்பர். செவ்வாய் ஆண்கிரகம், சகோதர காரகன், உத்தியோக காரகன், பூமி காரகன், கர்மக்காரகன், மூளைக்காரகன் ஆகிறார். செவ்வாய்க்கு மேஷம், விருச்சிகம் ஆட்சிவீடுகள், மேஷம் மூலத்திரிகோண வீடு, மகரத்தில் உச்சம், கடகத்தில் நீச்ச வீடாகும் கொண்டுள்ளார். செவ்வாய் மகரத்தில் இருக்க பிறந்த ஜாதகர்களுக்கு புத்திர பாக்கியம் செல்வம், அரசு அந்தஸ்து ஏற்படும்.  வெற்றி, புகழ் ஏற்படும்.