சந்திரன்15
சந்திரன், சுக்ரன் சேர்ந்து எந்த பாவத்தில் இருந்தாலும் ஆணுக்கோ, பெண்ணுக்கோ 30 வயதுக்கு மேல்தான் திருமணம் நடைபெறும். சந்திரன், சுக்கிரன் சேர்ந்து இருந்தால் புடவை, அழகு பொருட்கள், வியாபாரம் செய்து பணம் சம்பாதிப்பர். சந்திரன், ரிஷப ராசியில் இருந்து, குருவின் பார்வைபெறீன் பேரும் புகழும் கல்வி, கேள்விகளில் சிறந்தும் பலபேர் மெச்சும் வண்ணம் புகழ் பெற்று வாழ்வர்.