கருட முத்திரை:-
இடதுகை பெருவிரலையும் வலதுகை பெருவிரல்களையும் ஒன்றாக இறுகப் பற்றி, மற்ற விரல்கள் அனைத்தையும் நேராக விரித்தால் இதுவே கருட முத்திரையாகும். இதனை பத்து முதல் பதினைந்து நிமிடங்கள் வரை செய்யலாம். பலன்கள்:- 1.உயிர் ஆற்றலை அதிகரித்து சுறுசுறுப்பாக செயல்பட உதவும். 2.ஞாபகமறதியைப் போக்கி நினைவாற்றல் பெருகும். 3.பார்வைத் திறனும் கேட்கும் திறனும் அதிகரிக்கும். 4.கோபம்,வெறுப்பு, பழிவாங்கும் உணர்வு ஆகிய தீய குணங்கள் மறையும். 5.நரம்பு மண்டலம் உறுதியடையும். இம்முத்திரையை 10 முதல் 20 நிமிடங்கள் வரை செய்யலாம்.…