சுகமாக வாழ சில ஆலோசனைகள். 1
தாழ்வு மனப்பான்மைகளில் சிக்கிக் கொள்ளாமல் எதிலும் உணர்ச்சி வசப்படாமல் சந்தேகங்களுக்கு ஆளாகாமல் மற்றவர்கள் மீது அவநம்பிக்கை கொள்ளாமல் எளிமையாக மகிழ்ச்சிகரமாக இயல்பாக வாழுங்கள் யாரோ சிலர் அல்லது உங்களுக்கு வேண்டியவர்கள் உங்களை ஏமாற்றியிருந்தாலும் அதனால் பாதிப்படையாமல் உங்கள் மனதை இயல்பான வாழ்க்கையில் செலுத்தி சந்தோஷமாய் வாழ்க்கையை தொடருங்கள். உங்களுடைய பலவீனங்கள் குறைபாடுகளை நீங்கள் உணரத் தொடங்கினால் அவற்றை ஒரு போதும் மறவாது இருந்தால் நீங்கள் உண்மையிலேயே அதிர்ஷ்டசாலி இதை உதாரணம் கொண்டு புரிந்து கொள்ள முயல்வோம்.