கோள்களின் கோலாட்டம் -1.25 .3 – ஆம் – பாவத்தின் முக்கிய விதிகள் 16
சுக்கிரனும், 2, 3 – க்குடையவர் மூவரும் திரிகோணமடைய குரு பார்க்க, பல ஸ்திரீகளிடம் சுகத்தை அடைந்து கொள்வார். 3, 4 – க்குடையவர்கள், புதன் கூடி கேந்திரமடைய, அதில் ஒருவர் நீச்சம் பெற, துஷ்ட குலத்தவர்களையும், அடிமையுரச் செய்யும் சுந்தர வார்த்தைகளுடைய குணமுடையவர். 3 – க்குடையவர், 7 – ல் நிற்க, குரு பார்க்க 7 – க்குடையவர் லக்கினத்தில் இருந்து, புதன், சுக்கிரன் சேர, வயதான காலத்திலும் உத்தம ஸ்திரீ போகமுடையவர்.