ஸ்ரீ சங்கரரின் வாக்கு 7
புத்திமான் எல்லாக் காலத்திலும் கவனத்துடன் தனது ஆத்மாவை தியானிக்க வேண்டும். காணப்படாவிடடாலும் அது ஒன்றே உண்மை, வெளியுலகாய் அது விளங்கும் பொழுதும் ஸாக்ஷிமாத்திரமாகவே உளது. ஆகையால் அடையப்படுவது துக்கத்திற்குக் காரணம், அடைந்த மறுகணத்தில் அது ருசியற்றதாகிறது, அறிவிலிகளே அதை நாடுவர்.