சந்திரன் 8
சந்திரன் விருச்சிக ராசியில் இருக்கப்பெற்றால் மனிதாபிமானம் குறைந்திருக்கும், உறவினரை விட்டுப் பிரிந்திருப்பார். பொருளாதார நெருக்கடி இருக்கும். சந்திரன் கன்னியில் இருப்பாரானால் கல்வித்திறன் கூடும் இனிமையாக பேசுவர். சத்தியத்தை காப்பர், பெண்குழந்தை பாக்கியம் ஏற்படும். சந்திரன் கடகத்தில் இருக்கப் பெற்றவர்களுக்கு நல்ல வீடு அமையும். ஜோதிட புலமை ஏற்படும். கடல் கடந்த பயணங்களும், வெளிநாட்டு தொடர்பு உண்டாகும். ஏற்றுமதி, இறக்குமதி வியாபாரம் செய்யும் வாய்ப்பையும் பெற்றிருப்பார்கள். சந்திரன் பெண் ஜாதகத்தில் 6 அல்லது 8லோ இருக்கக்கூடாது.