சந்தோஷம் என்பது 27
உலகில் அதாவது மனிதர்கள் வாழுமிடங்கள் அனைத்திலும், குழப்பம், முறைகேடு, வன்முறை, கிளர்ச்சி, கொடூரத்தன்மை, போர், போன்றவையே நிறைந்துள்ளதை காணும் போது மனிதனுக்கு ஆறறிவு உண்டா அவன் சிந்திக்கும் ஆற்றல் பெற்றவன் தானா? அவன் சரி, தவறு, என்று அறியும் ஆற்றல் உடையவன் தானா எனும் ஐயப்பாடு எழுகிறது. இதில் தனி மனித வாழ்க்கையும் கூட குழப்பமும், எதிர்மறை சிந்தனைகளும் எதிர்மறை செயல்களும், நிறைந்ததாகவே உள்ளது.