சந்தோஷம் என்பது 26
நமது வாழ்க்கை முறையில், வாழுதல் எனும் நிகழ்வில் பிரச்சனைக்குறியதாக வன்முறை உள்ளடங்கியுள்ளது. அது ஒவ்வொரு மனிதனின் சிந்தனையிலும், செயலிலும் வெகு ஆழமாக ஊடுருவி இருக்கிறது என்பதே உண்மை அதனால் தான் தொழில் நுட்பங்களில் மனிதன் அசாதாரண பிரம்மிப்பூட்டும் வெற்றியடைந்த நிலையிலும் மனிதன் இன்னும் போர், பேராசை, பொறாமை, தாங்கற்கரிய சோகம் இவற்றால் கனமாக அழுத்தப்பட்டு இருக்கிறான்.