அனுபவ வைத்திய தேவ ரகசியம் இரண்டாவது காண்டம் 68
இதுவுமது ….. சமமான ஆகாரம், மித சஞ்சாரம் ஆக இவ்விரண்டையும் சதா அனுஷ்டிக்கிறவர்கள் அகந்துக காலத்தை மிரட்டி காலபிராப்தி அளவு ஜீவித்திருக்கிறார்கள். அவர்களது சீவனம் அமிருத துல்யமென்று சொல்லப்படுகின்றது. சிரஞ்சீவியாய் இருக்க விதம் ….. மரணம் இல்லாமல் சிரஞ்சீவியாய் இருக்க இஷ்டப்படுகிற பண்டிதர்கள் ( கால பிராப்தி ) என்கிற சத்துருவை விஜயம் செய்து ஸ்திரமாயிருக்கிறார்கள்.