ஸ்ரீ சங்கரரின் வாக்கு 2
விழிப்பு நிலையில் கனவு பொய்யாகிறது, கனவு நிலையில் விழிப்புலகம் இல்லை, ஆழ்ந்த உறக்கத்தில் இரண்டும் இல்லை. உறக்கமும் மற்ற இரண்டு நிலைகளில் இல்லை. ஆகையால் முக்குணங்களால் சிருஷ்டிக்கப்பட்ட மூன்று நிலைகளும் பொய்யோகின்றன. எனினும் அவற்றிற்குப்பின் உள்ள ஸாக்ஷியோ குணங்களைக் கடந்து நித்தியமாய் ஏகமாய் அறிவு வடிவான மெய்ப்பொருளாய் விளங்குகிறது.