கோள்களின் கோலாட்டம் -1.25 .3 – ஆம் – பாவத்தின் முக்கிய விதிகள் 8
7, 4 – க்குரியவர்கள் கூடி 3 – ல் நிற்க, 3 – க்குடையவர் கேந்திரமடைய குரு 5 – ல் நிற்க, சுகமாகிய நிலைத்த சகோதரம் உண்டு. செவ்வாய்க்கு 3 – க்குடையவர் உச்சமடைந்து, அவ்வுச்ச ராசியாதிபதி திரிகோணமடைய 3 – ல் குரு நிற்க, சுபர் பார்க்க செல்வந்தரான துணைவர்கள் உண்டு. 3 – க்குடையவர் திரிகோணமடைய, செவ்வாய், குரு கூடி திரிகோணமடைய சகோதரர்கள் நிலைப்பார்கள்.