தனஞ்சேருவது
ஒன்பதாமிடத்தோன் திசையில், பத்தாமிடத்தோன் புத்தியில் அப்போது நடக்கும் கோட்சாரத்தில் நாலாமிடத்தோன் பத்தாமிடத்திலிருக்க, பத்தாமிடத்தோனுக்கு நாலாமிடத்திலும் அல்லது அங்காரனுடைய கேந்திரத்திலேனும் சேர்ந்து நிற்க, பிறந்தோனுக்கு புராதனமான பூமி மனை இவைகளில் பத்தாமிடத்ததிபன் நிற்கும் திசையில் தனம் பொருள் இவைகள் கிடைக்கும்.