அஞ்சலி முத்திரை:-
நாம் இரு கைகளையும் கூப்பி இறைவனை அல்லது பெரியவர்களை வணங்குகிறோம் அல்லது வணக்கம் சொல்கின்றோமே அதுதான் அஞ்சலி முத்திரை எனப்படும். இரு கரங்களையும் ஒன்றோடொன்று வைத்து விரல்களுக்கு நடுவே இடைவெளி இன்றி ஒட்டியிருக்க வேண்டும். தலை, கழுத்து, முதுகுத்தண்டு வளையாமல் நேராக நிமிர்ந்து இருக்க வேண்டும். கைகளை மார்புப் பகுதியில் இருக்கும்படி வைத்திருக்க வேண்டும். பலன்கள் :- அலைபாய்கின்ற மனதை ஒருமுகப்படுத்தும். உடலில் உள்ள அனைத்து சக்தியோட்ட பாதைகளையும் சமநிலைப் படுத்தும். உடல் முழுவதும் பிராண சக்தி…