ஸ்ரீ சங்கரரின் பார்வையில் பிரம்மம் 7
பார்ப்பதெல்லாம், கேட்பதெல்லாம் பிரம்மமேயன்றி வேறல்ல. உண்மையனுபவத்தை அடைந்தபின் ஒருவன் உலகை அத்வீதீயப் பிரம்மமாகவே காண்கிறான். ஒரு பானையை எண்ணும் பொழுது மண்ணினுடைய ஞாபகம் நமக்கு தானே எழுவது போல், வியாவரிகப் பிரபஞ்சத்தை எண்ணும்பொழுது நமக்கு பிரம்மத்தின் எண்ணம் உதிக்கிறது.