ஸ்ரீ சங்கரரின் பார்வையில் பிரம்மம் 6
உபாதிகளற்றதும், சாந்தமானதும், முடிவற்றதும், ஒன்றேயாவதும் இரண்டற்றதும் ( பூமா ) அளவு கடந்தது எனக் கூறப்படுவதுமான பிரம்மம் எளிதில் அறியப்படுவதன்று. உலகம் பிரம்மமே, பிரம்மத்தினின்று பிரிதாக எது ஒன்றுமில்லை. பிரம்மம் அல்லாது ஏதாவது ஒரு பொருள் தனித்திருப்பதாய்த் தோன்றினால் அது கானல் நீரைப் போல் பொய்யானது