அதிசய முருகர்
தர்மபுரி மல்லிகார்ஜூனேஸ்வரர் ஆலயத்தில் வீற்றிருக்கும் முருகப்பெருமான் வித்தியாசமான தோற்றத்தில் காணப்படுகிறார். பொதுவாக முருகப் பெருமான் மயிலில் அமர்ந்தபடியோ, அல்லது மயிலின் அருகில் நின்றபடியோ தான் ஆலயங்களில் வீற்றிருப்பார். ஆனால் இந்த ஆலயத்தில் உள்ள முருகப்பெருமான் திருவுருவம், ஐயப்பன் போல் குந்தளமிட்ட நிலையில் அமைக்கப்பட்டுள்ளது. இவர் அருகில் இருக்கும் மயிலின் அலகில் பாம்பு ஒன்று காணப்படுகிறது. மற்றொரு பாம்பு படமெடுத்த நிலையில் முருகனுக்கு ஆதார பீடமாக உள்ளது.