அனுபவ வைத்திய தேவ ரகசியம் இரண்டாவது காண்டம் 60
கால ஞானம் இந்த கால ஞானத்தை முதலில் சதாசிவரானவர் தனது பிராண நாயகியாகிய உமா தேவியாருக்கும் உபதேசிக்கும் போது அந்த தேவியார் காலவசத்தினால் தூங்கிவிட்டாள். அப்போது ஒரு கிளியும், மீனும் கேட்டுக் கொண்டு அம்மையாருக்கு பதிலாக கிளியானது குரல் கொடுத்துக் கொண்டிருந்தது. சிவனார் கால ஞானத்தை முழுதும் உபதேசித்து பார்வதியை நோக்கினார், பார்வதி தேவியார் தூங்குவதை தெரிந்து எழுப்பி ஓ பிராண நாயகீ நீ தூங்கிக் கொண்டிருந்தாயே எனக்கு குரல் கொடுத்துக் கொண்டிருந்தது யாரென்று கேட்டார்…