உரையாடலின் ஒரு பகுதி 9

உண்ணும் உணவாலேதான் உடலுக்கு சக்தி மனம் பற்றும் விஷயத்தாலேதான் பற்றும் விஷயத்திற்க்கு சக்தி இதை புரிந்து கொண்டால் பற்ற வேண்டிய விஷயம் எது என தெரிந்து விடும் அப்படி தெரியவில்லை என்றால் தெரிந்தவர்களை அணுகி கேட்டு தெரிந்து கொண்டால் சக்தி, பக்தி ஆகும். அந்த பக்தி சக்தியாகி நம் வாழ்விற்க்கு வளம் சேர்க்கும்.

ஸ்ரீ சங்கரரின் பார்வையில் ஆத்மா 2

எப்படி ஒரு விளக்கைக் காண்பதற்கு வேறொரு விளக்கு வேண்டப் படுவதில்லையோ அப்படியே அறிவு வடிவான ஆத்மா தன்னைப் பிரகாசப்படுத்துவதற்கு வேறொரு அறிவை வேண்டுவதில்லை. ஆத்மா தன்னை ஜீவன் என்று கொண்டால், ஒருவன் பழுதையைப் பாம்பு என்று கொண்டு பயப்படுவது போல் பயத்துக்குள்ளாகிறது. தான் ஜீவனன்று தான் பரமாத்மா என்று அறிந்தனுபவிக்கும் பொழுது பயமின்மையை மீண்டும் அடைகிறது.