அனுபவ வைத்திய தேவ ரகசியம் இரண்டாவது காண்டம் 30
அன்ன பக்கவ ரத்த விருத்தி ஆமாசீரணகால நாடி லக்ஷணம் ….. அன்னபக்கவா சீரணகாலத்தில் நாடியானது புஷ்டி ரஹிதமாயும் மந்தமாயும் நடக்கும் சரீரத்தில் ரத்தமானது அதிகமாய் இருக்கும் போது நாடியானது கொஞ்சம் உஷ்ணமாய் நடக்கும். ஆமாசீரண யுக்தமான நாடி குருத்துவமுள்ளதாய் நடக்கும். சுக க்ஷ த்து மந்த பலஹீன நாடி லக்ஷணம் ….. சுகமாய் இருப்பவனுடைய நாடி ஸ்திரமாயும், பசியுடன் கூடி இருப்பவனது நாடி சபலமாயும், மந்தாக்கினி உடையவன் பலம் இல்லாதவன் இவர்களின் நாடி அதிமந்மாயும் நடக்கும்.