கேள்விகேட்க ஆரம்பிச்சா
கேள்விகேட்க ஆரம்பிச்சா யார் கூடையும் ஒத்துப்போகமுடியாது. ஏன்னா கேள்வி கேக்குறது யாருக்கும் பிடிக்காது அதனால மனசுக்குள்ள ஒரு கோபம் துளிர் விட்டு வளர முயற்சி பண்ணிட்டே இருக்கும் அதனாலேயே யார் கூடயும் ஒத்து போக முடியாது தூக்கம் வராது, புத்தி லோ, லோன்னு அலையும், சகலமும் தப்புன்னு படும். அனுபவம் நிறைய சொல்லித்தரும். உன் அனுபவம் உனக்குத் தெளிவைத் தரும். அப்ப உன் கோபம் என்னாச்சு அப்படின்னு பாரு உனக்கே சிரிப்பா வரும் இதுக்கா நாம கோபப்பட்டோம்…