பலவான்

மனம் எனும் குதிரையின் கடிவாளத்தை விட்டுவிட்டால் குதிரைகள் நம்மை அதன் இஷ்டபடி இழுத்து செல்லும். அதை இழுத்து பிடித்து நிறுத்துபவனே பலவான். மனதின் அலைகளை அடக்கி ஆள்பவனே சாந்தமானவன். வலிமையின் கீழ்நிலை ‍வெளிப்பாடே செயல் அமைதியோ அதன் உயர்நிலை வெளிபாடு. சோம்பலான மந்தநிலையை சத்துவம் என தவறாக எண்ணிவிட கூடாது.

பிண்டத்தில் நவகிரக விளையாட்டு 6 கோள்களின் கோலாட்டத்தின் படி

எலும்பு மாமிசம் தோல், நரம்பு, ரோமம் போன்றவற்றின் பராமரிப்பு குரு வேர்வை, மூத்திரம், வாய்நீர், உதிரம், விந்து போன்றவற்றின் பாராமரிப்பு சுக்கிரன்-சந்திரனும், பசி, தாகம், நித்திரை, மைதுனம்,சோம்பல் போன்றவற்றின் பராமரிப்பு சூரியன், செவ்வாயும்,  நடத்தல், இருத்தல் தாண்டல், படுத்தல் போன்றவற்றின் பராமரிப்பு புதன் பயம் மோகம், துவேசம் வெட்கம் திடம் போன்றவற்றின் பராமரிப்பு சனி-ராகு-கேதுக்கள் இவர்கள் எல்லாம் சேர்ந்து ஆடும் ஆட்டம் தான் கோலாட்டம்