எப்போதும் மனிதனாய் வாழ

உனக்காக வாழ்கிறேன் என்று உன்னை நேசிப்பவர் சொல்லியிருக்கலாம்..!!! ஆனால்..!!! உன்னால் தான் வாழ்கிறேன் என்று  யாரோ ஒருவர் சொல்லியிருக்கலாம்  அப்போது நீ மனிதனாக வாழ்ந்திருக்கிறாய்  என்று அர்த்தம்……!  நேசிப்பவர் சொன்னது ஆசையினால் அல்லது தேவையினால் சொல்லியிருக்கலாம் ஆனால் உன்னால் தான் வாழ்கிறேன் என்று சொல்பவர் எதை வைத்து சொல்லியிருப்பார் என்று உனக்கு தெரிந்தது என்றால் நீ எப்போதும் மனிதனாய் வாழ உள்ள சூத்திரம் கிடைத்துவிட்டது என்று அர்த்தம் அதை பிடித்துக்கொள் விட்டுவிடாதே  

மாமனிதர்கள்

துக்கமும், துயரமும் நிராசையும்,பேராசையும், எதிர்பார்ப்பும் ,ஏமாற்றமும், அனைத்து மனிதர்களையும் ஆட்கொள்கிறது ஆனால் மாமனிதர்கள் தங்கள் லட்சியத்தை அடைவதில் மட்டும் கவனம் செலுத்துவதால் அவர்களை உலகம் மாமனிதர்கள் என்று ஒப்புக்கொள்கிறது.