தூண்டுவதை மட்டும் நீ பார்த்துக்கொள்.

தூண்டுவதை மட்டும் நீ பார்த்துக்கொள். விளக்கு வெளிச்சத்தை தானே பார்த்துக்கொள்ளும். அது போல நீ முடிவு செய்த செயலை மட்டும் செய்துகொண்டிரு அந்த செயல் உன்னை எங்கு கொண்டு போகவேண்டுமோ அங்கு கொண்டுபோய்விடும். கால வித்தியாசங்கள் இருக்கலாம் ஆனால் கண்டிப்பாய் எங்கு சேர்த்தவேண்டுமோ அங்கு சேர்த்துவிடும் 

ஒரு எடக்கு மடக்கு கதை 2

அவள் விடுவாளா! மறுநாள், எக்ஸ்ட்ராவாக ஒரு சின்ன எவர் சில்வர் தூக்கில் எண்ணெய் ஊற்றித் தந்தாள். ”வாக்கிங் போகும்போது துப்பும்படி ஆயிட்டா, இதை வாயில் ஊத்திக்குங்க” என்றாள். தினமும் அவர் இப்படி எவர்சில்வர் தூக்கோடு நடந்து போவதை, அடுத்த தெருவில் உள்ள ஒரு பெண்மணி கவனித்துவிட்டு, ”தினமும் எண்ணெய் கொண்டு போறீங்களே, கோயிலுக்கா?” என்று கேட்டாள். அவளிடம், தான் எண்ணெயை வாயில் ஊற்றிக் கொப்பளிப்பதை யெல்லாம் விளக்க விரும்பாமல், ‘ஆமாம்’ என்று தலையாட்டி வைத்தார் நம்மாள். மறுநாள்……