பிண்டத்தில் நவகிரக விளையாட்டு 4 கோள்களின் கோலாட்டத்தின் படி ..

இந்த நவக்கிரகங்கள் மனித தேகத்தினுள் புகுந்து விளையாடும் போது? நான்.. எனது..சாதூர்யம்,திறமை,..பராக்கிரமம்,..புத்திசாலித்தனம், முயற்சி,.. என்பதெல்லாம் எங்கே? இந்த மனிதனுக்கு எது சொந்தம்? மனிதனின் தேகத்தில் அமைந்த 72000 நாடி நரம்புகளும், நவக்கிரகங்களின் உப அதிகாரிகள் பங்கு எடுத்து செயல்படுவதேயாகும். இம் மனிதனின் தேகத்தின் முக்கியமான அம்சம் வாதம்-பித்தம்-சிலேத்துமம். இவைகளில் குரு-புதன்-சனி-வாத அதிகாரியாகவும், சூரியன்-செவ்வாய்-ராகு-கேது பித்த அதிகாரியாகவும் நின்று செயல்படுவதை கண்கூடாக பார்க்கலாம்..

கர்மா செயல்படும் விதம் 1

மனிதன் செயல்படுவதற்க்கு பல உறுப்புகளின் செயல்கள் தேவைப்படுகிறது. அதில் மிக மிக முக்கிய பங்கு வகிப்பது உடலும், உயிரும் ஆகும். உடல் இயங்க காரியமாற்ற, சிந்திக்க, செயல்பட உடலின் பல உறுப்புகள் தொடர்ந்து செயல் புரிகிறது. அப்படி செயல்பட ஆதாரமாய் இருப்பது கண்ணுக்கு தெரியும் உடலின் உள் கண்ணுக்கு தெரியா காற்று உட்சென்று வெளிவரும் இயக்கமே மற்றஎல்லா இயக்கங்களுக்கும் அடிப்படை காரணமாய் இருக்கிறது. இதை நாம் பிராணன் என்றும் உயிர் என்றும் அழைக்கின்றோம். இந்த உயிராகப்பட்டது இருக்க…