நாட்டின் நிர்வாகம் 1
ஒரு நாட்டின் நிர்வாகம் எனும் அமைப்பு பல கிளைகளை கொண்ட அல்லது பல வேர்களை கொண்ட மரம். அது இயங்கும் சூட்சமம் நாட்டின் நிர்வாகத்தில் இருப்பவர்களுக்கே சரியாக தெரியாது. மக்களின் ஆதரவினால் வந்தவர்களிடம் மக்களாகியவர்கள் வேறு எதையும் அல்ல இதையும் கூட எதிர்பார்க்க கூடாது. நாட்டின் நிர்வாக சக்கரத்தின் பற்களில் பல துறைகள் உள்ளது. அதன் இயக்கங்கள் நாம் நினைக்கும் தர்மம், நியாயம், உண்மை போன்றவற்றிற்க்கு வித்தியாசமான அர்த்தங்களை கொண்டிருக்கும்.