ஸ்ரீ சங்கரரின் வேதாந்த முரசு 5

காலையில் தோன்றி மாலையில் அழியும் அநித்தியப் பொருள்களைப் போல் அஞ்ஞானத்தால் தோன்றும் பயன் அனைத்தும் அழிவுடையது.‍ அஞ்ஞானனியானவன் பயனில் ஆசை வைத்து கர்த்ருத்வ போக்த்ருத்வ புத்தியுடன் கருமம் செய்கிறான். அவன் மதிமயங்கியவன். ‘ நான் செய்கிறேன் ‘ ‘ நான் அனுபவிக்கிறேன் ‘ என்றெல்லாம் எண்ணுகிறான். அஞ்ஞானிகள் தத்தம் முன்வினைக்குத் தக்கபடி உலக விஷயமாகிற கடையைப் பரப்பி வைத்துக் கொண்டும், தங்கள் விதியை நொந்து கொண்டும் வாழ்க்கையில் ஒட்டிக் கொண்டிருக்கின்றனர்.

சிவராத்ரி ஒரு விளக்கம்: ஜோதிட கலாநிதி டாக்டர் எஸ்.சுயம்பிரகாஷ்

சிவராத்ரி ஒரு விளக்கம்: மாசி மாதத்தில் கிருஷ்ணபக்ஷத்தில் மகாசிவராத்ரி விரதம் அனுஷ்டித்தல் வேண்டும். த்ரயோதசி எனப்படும் பதின்மூன்றாம் சக்தியும், சதுர்த்தசி எனும் பதிநான்காம் நாள் சிவமும் ஆகும். நடுநிசியில் சதுர்தசியும், அதற்கு முன்னம் த்ரயோதசியும் இருப்பது உத்தமம். குறைந்த நேரம் த்ரயோதசியும், அதிக நேரம் சதுர்தசி அல்லது அதிக கால அளவு த்ரயோதசியும், குறைந்த கால அளவு சதுர்தசியும் அல்லது சூரிய உதயத்தில் த்ரயோதசி இருந்து பின்னர் நாள் முழுவதும் சதுர்தசி இருந்தாலும் அது சிவராத்ரியாகும். அமாவாசை…

சிவராத்திரியின் பலன்கள்

சிவபெருமானை வழிபடும் முக்கியமான வழிபாடுகளில் ஒன்று சிவராத்திரி ஆகும்.  மாதம் தோறும் வளர்பிறை மற்றும் தேய்பிறை  சதுர்த்தசியில்  சிவராத்திரி வரும். மாசி மாத தேய்பிறை சதுர்த்தசியில் வரும் சிவராத்திரியே  மகா சிவராத்திரி என்று அழைக்கப்படுகிறது. ‘நித்ய சிவராத்திரி, யோக சிவராத்திரி, பட்ஷ சிவராத்திரி, மாத சிவராத்திரி, மகா சிவராத்திரி’ என சிவராத்திரி ஐந்து வகையாக வருகின்றன. நித்ய சிவராத்திரி — ஒரு வருடத்தில் தேய்பிறை சதுர்த்தசியில் 12,  மற்றும் வளர்பிறை சதுர்த்தசியில் 12 என 24 சிவராத்திரிகள் தான்…