கோள்களின் கோலாட்டம் 1 -1.7 12 லக்னங்களில் ஆய்வு துலா லக்கினம்4

பூரண பாவியான சனி, துலாம் லக்கினத்திற்கு பூரண சுபராகி விடுவதால் யோகத் தன்மை பெற்று நல்ல பலன்களைத் தரவல்லவராகி விடுவதாக நூல்களில் சொல்லப்பட்டு உள்ளது. அனால், இவர் தசா புத்திகள் நடக்கும்போது ஏற்படும் பலன்களை அனுபவிப்பவர்களுக்குத் தான் தெரியும். பலவிதமான சோதனைகளுக்கு உட்பட்டு வருபவர்களுக்கு தெரியும். பலாபலன்களில் பாதிப்பை எழுத இடம் தராத சனி இங்கு பாபியாக செயல்படும் காரணம் ? கிருத்திகை, உத்திரம், உத்திராடம், ரோகிணி, அஸ்தம், சித்திரை, மிருகசீரிடம், புனர்பூசம், விசாகம், பூரட்டாதி, நட்சத்திரம்…

உரையாடலின் ஒரு பகுதி 6

ஒரு சந்தேகம், விஸ்தாரமாக நாடெங்கும் பொது நன்மைக்காக விரைவில் ஒரு சீர்திருத்தத்தையோ,காரியத்தையோ, வலுவுடன் செய்ய ஏகாதிபத்திய சர்வாதிகார சக்தி வேண்டுமல்லவா சர்வாதிகார சக்தி என்பது இரண்டு புறமும் கூர்மையான கத்தி அது ஏதாவது சந்தர்ப்பத்தில் தன்னையோ, பிறரையோ காயப்படுத்திவிடும். ஏகாதிபத்திய ஆட்சியிலும் ஆட்சியை நடத்தும் சர்வாதிகாரிக்கு முன்போ பின்போ சுயநல இச்சைகள் ஏற்படும் போது மக்களின் சுதந்திரம் பறி போவது தவிர்க்க முடியாதது ஆகிவிடும். எந்த சமயமும் கொடுங்கோண்மையாக மாறக்கூடிய சர்வாதிகார அரசியலைவிட சக்தியற்ற மந்தமான அரசியல்…

ஸ்ரீ சாரதா தேவியாரின் அன்பு முரசு 16

எதனையேனும் பற்றி அறிந்து கொள்ள வேண்டும் என்ற விருப்பம் எழுமேயானால், தனியான இடத்தில் தங்கிக் கண்ணீர் மல்க ஆண்டவனையே வேண்டுக. அவன் உன் மனத்திலுள்ள அழுக்கையும், துயரத்தையும் போக்குவான். பின்பு உனக்கு எல்லா வற்றையும், விளங்கும்படி செய்வான். நித்திய அநித்தியப் பொருள்களைப் பற்றி எப்போதும் விசாரணை செய். உன் மனதைக் கவருகின்ற புறப்பொருள்கள் எல்லாம் அழியும் தன்மையுடையன என்பதை அறிய முயல்க, உன் கவனத்தை ஆண்டவனிடம் திருப்புக.