ஸ்ரீ சாரதா தேவியாரின் அன்பு முரசு 15
ஞான சாதனை ஞான சாதனை என்பது ஆண்டவனுடைய தாமரைப் பாதங்களில் மனத்தை நிறுத்தி அவன் நினைவிலேயே மூழ்கிக் கிடப்பதாகும். ஞான சாதனைகளைத் தனிமையான இடத்தில் பழகுவது மிக அவசியமாகும். செடி சிறியதாக இருக்கும்போது வேலி மிக அவசியம். அது பெரியதாகிவிட்டால் கால் நடைகள் அதற்கு எவ்விதத் தீங்கும் செய்ய முடியாது. அது போல் சில காலம் தியானத்தில் ஆழ்ந்த மனம் நிலைத்த பிறகு நீ எங்கு வேண்டுமானாலும் தங்கி யாருடன் வேண்டுமானலும் பழகலாம். உன்மனம் அதனால் பாதிக்கப்படாது.