ஸ்ரீ சாரதா தேவியாரின் அன்பு முரசு 8
கேள்வி — நீங்கள் நைவேத்தியம் செய்யும் உணவை உண்மையில் குருதேவர் உண்கிறாரா? பதில் – ஆம், அவர் உண்கிறார். அவர் கண்ணிலிருந்து ஓர் ஒளி எழுந்து உணவுப் பதார்த்ததங்கள் அனைத்தையும் தடவுகிறது. பக்தர்களின் திருப்திக்காகவே அவர் நைவேத்திய உணவை உண்கிறார். அந்தப் புனிதப் பிரசாதம் மனத்தைப் பரிசுத்தமாக்கும். ஆண்டவனுக்கு நைவேத்தியம் பண்ணாத உணவை உண்பதால் மனம் அசுத்தமடைந்துவிடும். குருதேவருக்கு நைவேத்தியம் பண்ண எவ்விதமான சடங்குகளும் தேவையில்லை. குருமுகமாகப் பெற்ற மந்திரமே போதுமானது.