அனுபவ வைத்திய தேவ ரகசியம் இரண்டாவது காண்டம். 1
ஸ்ரீ மத் மேதா தக்ஷிணா மூர்த்திநே நம., சிருஷ்டி, ஸ்திதி, லயம், திரோதானம், அனுக்கிரகம், என்னும் பஞ்ச கிருத்தியங்களை நடத்தும் மேதா தக்ஷிணாமூர்த்தி சுவாமிகளது பாதாரவிந்தங்களை இடைவிடாது திரிகரண சுத்தியுடன் தியானித்து ( வைத்தியோ நாராயணா ஹரி ) என்கிற வாக்கிய அனுசசாரமாய், ஆயுள்வேதத்திற்கு மூல புருஷோத்தராகிய வைகுண்டவாசனை சதாபஜித்து நான் எழுதும் கிரந்தம் விக்கினமில்லாது சம்பூரணம் ஆகும் பொருட்டு திரிசக்தி சொரூபத்தை ஸ்தோத்தரித்து ஆயுர்வேத குறவர்களை புகழ்ந்து இரண்டாவது காண்டம் எழுதலாயினேன். இக்காண்டத்தில், தன்வந்தரி, சாரங்கதரீயம்,…