ஸ்ரீ ச ங் க ர ரி ன் வே தா ந் த மு ர சு.
அவித்தை (அஞ்ஞானம்). உடல் முதலிய தொகுதிகளை ‘ தான் ‘ அல்லது ‘ ஆத்மா ‘ எனக் கொள்வது அவித்தை அல்லது அஞ்ஞானம். (வெளிச்சம் குறைந்த இடத்தில்) ஒரு பழுதை பாம்பெனக் கருதப் படுவது போலும், முத்துச் சிப்பி வெள்ளியெனக் கருதப்படுவது போலும், அஞ்ஞானியால் உடல் ஆத்மா எனக்கருதப்படுகிறது. ஒரு ஸ்தம்பம் ஆள் என்று தவறாய்க் கருதப்படுவது போலும், கானல், நீர் என்று கருதப்படுவது போலும், அஞ்ஞானியால் உடல், ஆத்மா எனக் கருதப்படுகிறது. ஸம்ஸாரம் எனப்படும் தோற்ற…