ஸ்ரீ சாரதா தேவியாரின் அன்பு முரசு 5
குருதேவர் மகா சமாதி அடைந்தபோது நானும் போகவே விரும்பினேன், ஆனால் அவர் என் முன் தோன்றி, நீ இங்கேயே இருக்கவேண்டும். செய்து முடிக்கப் பலபணிகள் இருக்கின்றன, என்று கூறினார். சூட்சும சரீரயாய்ப் பக்தர்கள் இதயத்தில் முந்நூறு வருடகாலம் வாழப்போவதாக அவர் கூறினார். உலகிற்குக் கடவுளின் தாய்மைத் தன்மையை எடுத்துக் காட்டவே ஸ்ரீராமகிருஷ்ணர் என்னை இவ்வுலகில் விட்டுச் சென்றார்.