சிந்திக்க செயல்படுத்த
மனசக்தி- குரு வாசகம் மனம் என்ற சக்தி இல்லை என்றால் மந்திரம் யந்திரம் தந்திரம் எதுவும் பலன் அளிக்காது. மனம் உங்களிடம் தான் இருக்கிறது அதை எங்கும் கடன் பெற தேவையில்லை. அதை அடக்க நீங்கள் தான் தகுதி பெற வேண்டும். உங்கள் மனதை குருவாலோ பெற்றோராலோ, இறைவனாலோ கூட அடக்க முடியாது. மனம் உங்களுக்கே கட்டு படக் கூடியது அதை ஓடுக்கி தவம் செய்யுங்கள் உங்கள் வெற்றியின் ரகசியம் இதில் தான் உள்ளது .