19 – ந்தேதியில் பிறந்தவர்களின் பலன்கள்.
சூரியனின் ஆதிபத்தியமுடைய எண் இதுவாகும். பிடிவாத குணம் உடையவர்கள். விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை என்பது சிறிதளவுகூட இவர்களிடத்தில் இருக்காது. எனவே, இக்குணங்களை விட்டுவிட்டால்இவர்கள் வாழ்க்கையில் சிறப்பான நல்ல முன்னேற்றத்தை முழுமையாகப் பெற்றிடலாம் என்பது சிறந்த வழியாகும். எனவே அனுசரித்துப் போகும் குணம் அவசியம் தேவையாகும்.