நாடிகள்

மனித உடலிலுள்ள இடகலை, பிங்கலை என்ற உஷ்ண, குளிர் நாடிகள் சுஷிமுனா என்ற சூக்கும நாடியை, மூலாதாரம், ஸ்வாதிஷ்டானம், மணிபூரகம், அநாகதம், விசுத்தி, ஆக்ஞா, சகஸ்ராரம் ஆகிய ஏழு இடங்களில் சந்திக்கின்றன.

ஞானசொரூபன்.

மண்ணினால் நாசிக்கு விகாரமாகிய நாற்றம் ஏற்படுகிறது. இந்த பூத விகாரத்தினால், முழுமை வெளிப்பட்டு , உலகம் இயங்கி, தன் வழியே ஒடுங்கி, இறுதியில் மூலாதாரத்தில் உறங்கும் குண்டலினியில் சென்று அடங்குகின்றன. இவைகளில் நிறைந்து மனிதரின் உள்ளத்து உணர்வு வடிவமாக விளங்குவதுதான் புருஷத்துவம். உறங்கிக் கிடக்கும் இந்த குண்டலினி சக்தியைச் சீற வைத்து இயக்குபவன்தான் சர்வ சக்தி வடிவான ஞானசொரூபன்.

என் மனம் என்னுடைய பேச்சைக் கேட்பதே இல்லை

அது ஒரு புத்த மடாலயம். அந்த மடாலயத்தின் தலைமை துறவியாக இருந்தவர், மிகவும் அனுபவம் வாய்ந்தவர். அவரிடம் பலரும் துன்பங்களை கடக்கும் வழி உள்ளிட்ட பலவற்றை அறிந்துகொள்வதற்காக வருவார்கள். அன்றும் அவரைப் பார்க்க ஒரு வியாபாரி வந்திருந்தார். அவர் அந்த துறவியிடம், “சுவாமி.. என்னுடைய மனம் என்னுடைய பேச்சைக் கேட்பதே இல்லை. அதை நான் எவ்வளவு கட்டுப்படுத்தினாலும் அதற்கு பலன் கிடைப்பதில்லை” என்று கூறி அங்கலாய்த்துக் கொண்டார். அப்போது துறவியின் அருகில் அவர் வளர்த்து வந்த குரங்கு…

எங்கும் அப்பாவிகளே பலியாகின்றனர்.

காட்டில் பயங்கரமான நோய் பரவியது நிறைய விலங்குகள் இறந்தன. பல சாகும் தருவாயில் இருந்தன. விலங்குகளின் அரசனான சிங்கம் எல்லா விலங்குகளையும் அழைத்தது. “காட்டில் பாவம் அதிகரித்து விட்டது. இந்தக் காட்டில் யார் அதிகப் பாவம் செய்தார்களோ, அவரைக் கண்டுபிடித்துப் பலி கொடுத்தால் எல்லாம் சரியாகிவிடும்” என்று சொன்னது சிங்கம். ஒருவரும் பேசவில்லை. சிங்கம், தான் நிறைய ஆடுகளைக் கொன்று பாவம் செய்ததாகவும், தான் பலியாவதற்குத் தயார் என்றும் சொன்னது. உடனே நரி, “மாண்பு மிகு அரசே,…

இந்து லக்கினம் பார்ப்பது எப்படி? கோள்களின் கோலாட்டம் -1.16

இந்த லக்கினம் லக்கினத்திற்கு – சந்திரனுக்கு 9 -க்குரியவர்கள் கிரண கதிர்களை கூட்டி 12 – ஆல் வகுக்க மீதி வருவது சந்திரனுக்கு எந்த இடமோ அதுவே இந்து லக்கினம் விருச்சிக லக்கினத்திற்கு  துலாம் ராசிக்கு இந்து லக்கினம் அறிய. விருச்சிக லக்கினத்திற்கு 9 – க்குரியவர் சந்திரன். இதன் கதிர் 16.  துலாம் ராசிக்கு  9 – க்குரியவர்  புதன்  இதன் கதிர்  8 இத்தோடு கூட்ட 16+8=24 –  12 –ஆல்வகுக்க மீதி வருவதில்லை.…

கிரகங்களின் அவஸ்தா நிலை பலன்கள் கோள்களின் கோலாட்டம் -1.17

கிரகங்களின் அவஸ்தா நிலை  பலன்கள் சனி, ராகு, கேதுவுக்கு விருத்தா அவஸ்தைக்கூடாது. சுக்கிரனுக்கு கௌமார மரண அவஸ்தைக்கூடாது. செவ்வாய் விருத்தா மரண அவஸ்தைக்கூடாது. புதனுக்கு விருத்தா மரண அவஸ்தைக்கூடாது. சூரிய – குருவுக்கு விருத்த மரண அவஸ்தைக்கூடாது. சந்திரனுக்கு பால்ய மரண அவஸ்தைக்கூடாது.

கிரகங்களின் அவஸ்தா நிலை 2 கோள்களின் கோலாட்டம் -1.17

ரிசபம், கடகம், கன்னி, விருச்சிகம், மகரம், மீனம் போன்ற ராசிகளில், 1 முதல் 6 பாகைக்குள் இருக்கும் கிரகம் மரணா அவஸ்த்தை 7 முதல் 12 பாகைக்குள் இருக்கும் கிரகம் விருத்தாஅவஸ்த்தை 12 முதல் 18 பாகைக்குள் இருக்கும் கிரகம் யௌவன அவஸ்த்தை 19 முதல் 24 பாகைக்குள் இருக்கும் கிரகம் கௌமார அவஸ்த்தை 25 முதல் 30 பாகைக்குள் இருக்கும் கிரகம் பால்ய அவஸ்த்தை

கிரகங்களின் அவஸ்தா நிலை கோள்களின் கோலாட்டம் -1.17

கிரகங்களின் அவஸ்தா நிலை மேசம், மிதுனம், சிம்மம், துலாம், தனுசு, கும்பம் போன்ற ராசிகளில். 1 முதல் 6 பாகைக்குள் இருக்கும் கிரகம் பால்ய அவஸ்த்தை 7 முதல் 12 பாகைக்குள் இருக்கும் கிரகம் கௌமார அவஸ்த்தை 13 முதல்18 பாகைக்குள் இருக்கும் கிரகம் யௌவனஅவஸ்த்தை 19 முதல் 24 பாகைக்குள் இருக்கும் கிரகம் விருத்தா அவஸ்த்தை 25 முதல் 30 பாகைக்குள் இருக்கும் கிரகம் மரணா அவஸ்த்தை

கிரகங்களின் அஸ்தமன நிலை. கோள்களின் கோலாட்டம் -1.16

கிரகங்களின் அஸ்தமன நிலை. சூரியனிலிருந்து 12 பாகைக்குள் சந்திரன் இருப்பின் அஸ்தமனம் சூரியனிலிருந்து 17 பாகைக்குள் செவ்வாய் இருப்பின் அஸ்தமனம் சூரியனிலிருந்து 14 பாகைக்குள் புதன் இருப்பின் அஸ்தமனம் சூரியனிலிருந்து 11 பாகைக்குள் குரு இருப்பின் அஸ்தமனம் சூரியனிலிருந்து 10 பாகைக்குள் சுக்கிரன் இருப்பின் அஸ்தமனம் சூரியனிலிருந்து 15 பாகைக்குள் சனி இருப்பின் அஸ்தமனம்

திரேக்காண பலன். சந்திரன் கோள்களின் கோலாட்டம் -1.14

சந்திரன் சர்ப திரேக்காணத்தில் இருந்தால் கொடூர சுபாவம். ஆயுத திரேக்காணத்தில் இருந்தால் பிராணிகளை அதிகமாக இம்சிப்பான். சதுஸ்பாத திரேக்காணத்தில் இருந்தால் குரு பத்தினியை புணர்வான். பட்சி திரேக்காணத்தில் இருந்தால் அங்கும் இங்கும் அலைந்து திரிவான்.

திரேக்காண பலன். கோள்களின் கோலாட்டம் -1.14

ஜாதகன் எந்த திரேக்காணத்தில் பிறந்தானோ, அந்த திரேக்காணத்திற்கு சொல்லிய சுபாவம், குணம் உள்ளவனாக இருப்பான். அதில் சொல்லப்பட்ட வஸ்துக்கள் மூலம் லாபமோ நஷ்டமோ கஷ்டமோ அடைவான். திருடர்களையும் அறியலாம். குரு – செவ், முதல் திரேக்காணத்தில் இருப்பது நலம். சனி – புதன் 2 – வது, திரேக்காணத்தில் இருப்பது நலம். சுக் – சந் – 3 -வது திரேக்காணத்தில் இருப்பது நலம். லக்னாதிபதி திரேக்காணராசியில் உச்சம் பெறுவது மிக்க நலம். எந்த திரேக்காணத்தில் பாவக்கிரகங்கள்…

சிந்திக்க செயல்படுத்த

மனசக்தி- குரு வாசகம் மனம் என்ற சக்தி இல்லை என்றால் மந்திரம் யந்திரம் தந்திரம் எதுவும் பலன் அளிக்காது. மனம் உங்களிடம் தான் இருக்கிறது அதை எங்கும் கடன் பெற தேவையில்லை. அதை அடக்க நீங்கள் தான் தகுதி பெற வேண்டும். உங்கள் மனதை குருவாலோ பெற்றோராலோ, இறைவனாலோ  கூட அடக்க முடியாது. மனம் உங்களுக்கே கட்டு படக் கூடியது அதை ஓடுக்கி தவம் செய்யுங்கள் உங்கள் வெற்றியின் ரகசியம் இதில் தான் உள்ளது .

சுதந்திரம்

ஜனங்கள் சுதந்திரத்திற்கு வேண்டி போராடுவார்கள். பின் சுதந்திரம் பெறுவார்கள். அதன் பின் பெற்ற சுதந்திரத்தை வேறு ஒருவரிடம், அடகு வைத்து அடிமையாய் இருப்பார்கள். இதில் காலம் மாறுபடும் ஆட்கள் மாறுவார்கள் ஆனால் மக்களின் அடிமைத்தனம் மாறவே மாறாது மக்களின் சுதந்திர தாகம் தீரவும் தீராது என்ன செய்வது நம் மக்களுக்கு சுதந்திரம் என்பது எது என்பதே தெரியாததால் சுதந்திரம் வாங்கவும் தெரியவில்லை அப்படியே வாங்கினாலும் வாங்கிய சுதந்திரத்தை வைத்து வாழவும் தெரியவில்லை பாவம்

கோள்களின் கோலாட்டம் பாகம் – 1 – 1.3 அசாத்திய ராசிகள்:-

அசாத்திய ராசிகள்:- விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் தர்ம தன்மைகளையும், புத்திர விருத்தியினையும், ஆத்ம ஞான போதனைகளையும் கற்பனா வளம் மிகுந்த தன்மையினையும் சாஸ்திர நுட்ப ஆய்வுத் திறன்களையும், எதையுமே உடனுக்குடன் செய்யவேண்டும் என்ற ஆற்றலையும் தருவது, மனித செயலின் மாறுபாடு கண்டு தரம் பிரித்து ஏற்றுக்கொள்ளும் தன்மை.

கோள்களின் கோலாட்டம் பாகம் – 1 – 1.3 சாத்திய ராசிகள்:-

சாத்திய ராசிகள்:- ரிஷபம், மிதுனம், துலாம் மெதுவாக செயல்படும் சரீர அழகை எடுத்துக்காட்டும். மலட்டுத் தன்மைகளைத் தரும். அறிவு படைத்த சாஸ்திர ஆராய்ச்சி மிகுந்த ராசிகள் ஆகும். நெறி தவறா நடத்தைக்கு உறுதுணையாக செயல்பட்டு முறையான காரியங்களை நிகழ்த்துவது.

கோள்களின் கோலாட்டம் பாகம் – 1 – 1.3 யாப்பிய ராசிகள்;-

யாப்பிய ராசிகள்;- மேஷம், கடகம், சிம்மம், கன்னி எதையுமே விரைவாக செய்ய நினைப்பார்கள். ஆனால் குறைவான பலன்களை தரும். ஆன்மிக உணர்வுகளை வெளிப்படுத்தும் உயர்ந்த தன்மைகளை தரும். பிறப்பின் வேறுபாடு, செயல் வேறுபாடு பெறுமை-சிறுமை, ஆணவம், அகங்காரம், ஆசை ,போட்டி ,பொறாமை, போன்றவைகளை கொண்டது .

31 – ந்தேதியில் பிறந்தவர்களின் பலன்கள்

 ராகுவின் ஆதிபத்தியமுடைய எண் இதுவாகும் . பிறரை சுலபாக எடைபோடுவதில் வல்லவர்கள். பொதுச் சேவை, ஆன்மீக ,ஈடுபாடு போன்றவற்றில் ஈடுபாடு உடையவர்கள், பிரபலம் உடையவர்கள். ஜோதிடம், மந்திர சாஸ்திரம் போன்ற துறைகளில் மிகவும் பிரசித்தி பெற்றிடுவார்கள் உயர்ரக பதவியை வகிப்பவர்கள். மனோதத்துவ நிபுணர் என்றும் சொல்லலாம்.

ஒரு கனவு

இரவு படுக்கும்போது எல்லாம் சரியாகத்தான் இருந்தது. திடீரென்று இனிமேல் பணத்துக்கு மதிப்பு இல்லை என்று அறிவித்துவிட்டார்கள். காலையில் எல்லாம் மாறிவிட்டன. பால் பாக்கெட் இல்லை.  பேப்பர் இல்லை. இனிமேல் பணத்துக்கு மதிப்பு இல்லையென்றால் எதைக் கொடுத்து அரிசி, பருப்பு போன்ற அத்தியாவசியப் பொருட்களை வாங்குவது? மக்கள் எல்லோரும் சூப்பர் மார்க்கெட், மளிகைக் கடைக்காரரைப் போய்ப் பார்க்க… ‘எதுவும் விக்கிறதுக்கு இல்லம்மா, எல்லாத்தையும் எங்க குடும்பத்துக்காக வச்சிக்கிட்டோம்’ என்று உணவுப்பொருட்களைப் பதுக்கிக்கொண்டார்கள் வாங்கி வைத்திருந்த உணவுப்பொருட்கள் எல்லாம் கொஞ்ச…

30 -ந்தேதியில் பிறந்தவர்களின் பலன்கள்.

குருவின் ஆதிபத்தியமுடைய எண் இதுவாகும் . பொருளாதார வசதியைப் பொறுத்தவரையில் திருப்தி என்பது இருக்காது. தேவையானபோது வசதி அமையாது. செலவாளிகளாக இருப்பார்கள். முற்கால வாழ்க்கையைவிட பிற்கால வாழ்வில் சுகம் பெறுபவர்கள். நுட்பமான அறிவு கொண்டவர்கள். நெஞ்சழுத்தம் உடையவர்கள். ஆபத்தான காரியங்களில் ஈடுபட்டு வெற்றியை அடைவார்கள். தியாகிகளாவர்.

29 – ந்தேதியில் பிறந்தவர்களின் பலன்கள்.

சந்திரனின் ஆதிபத்தியமுடைய எண் இதுவாகும். அதிகமாகச் சம்பாதிப்பார்கள். ஆனால் தவறான வழியில் வரும் சம்பாதனையாகவே இருக்கும். சமூகத்திற்கு விரோதச் செயல்களையும், சட்டத்தை மீறும் செயலிலும் ஈடுபடுவார்கள். வன்முறையில்தான் தமது பிரச்சினைக்குத் தீர்வு காண்பார்கள். எனவே இவர்கள் நல்வழியில், மனதையும், செயலையும்,  ஈடுபடுத்தினால் நற்குணங்களைப் பெறும் வாய்ப்பு ஏற்படும். நிதானம் என்ற குணமே இவர்களிடத்தில் இடம் பெறாது.

28 – ந்தேதியில் பிறந்தவர்களின் பலன்கள்.

 சூரியனின் ஆதிபத்தியமுடைய எண் இதுவாகும். கடினமான தோற்றம் உடையவர்கள். கள்ளங்கபடம் இல்லாதவர்கள். மற்றவர்களின் சொல்லை நம்புவர். தவிர, இவர்கள் பிறரிடம் சுலபமாக ஏமாற்றம் அடைவர்கள். தமது வாழ்க்கையை மகிழ்ச்சியுடனும், நிம்மதியாகவும், அனுபவிப்பவர்கள். எப்படிப்பட்ட துன்பத்தையும் தமது விதி என்று எண்ணி கவலையை மறப்பவர்கள். பிறரின் மனம் நோகாமல் நடப்பவர்கள். பற்றாக்குறைகளும் கலந்திருக்கும்.

27 – ந் தேதியில் பிறந்தவர்களின் பலன்கள்.

அங்காரகனின் ஆதிபத்தியமுடைய எண் இதுவாகும். எதையும் அவசரப்படாமல் நிதானமாகச் செயலாற்றுவார்கள். எதையும் சீராகச் செய்யவேண்டும் என்ற கருத்து உடையவர்கள். ஒருமுறைக்கு பலமுறை யோசித்தே செயலில் ஈடுபடுவார்கள். அடக்கம், பணிவு, அமைதி, போன்ற குணங்கள் பொருந்தியவர்களாக இருப்பார்கள்.

நமது வாழ்க்கையை நிர்ணயிப்பது

நமது வாழ்க்கையை நிர்ணயிப்பது நமது ஆசையோ, திறமையோ, அறிவோ, அல்ல. நம் கண்ணுக்கும் ,மனதிற்கும், நமது அறிவிற்கும் புலனாகாத ஒரு மாபெரும் சக்தி அந்த சக்தி விரும்பும் பாதையில் வாழ்வது மட்டும் தான் நம்மால் முடியும்  செயல் விதியின் புயலில்,  அந்த சக்தியின் சுழலில் மனிதர்கள் பலபடி எடுத்து வீசப்படுகிறார்கள், யார் யார் எங்கெங்கு மோதிக்கொள்கிறார்களோ எதனால் மோதிக்கொள்கிறார்களோ எப்படி மோதிக் கொள்கிறார்களோ யார் கண்டது இயற்க்கையின் விசித்திரத்தை அந்த மாபெரும் சக்தியின் ரகசியத்தை நம்மால் அறிந்துகொள்ள…

அறிவின் தாக்கம்

உங்களின் அத்தனை பொய்களையும் பொய் சமாதானங்களையும்.. ஏற்றுக்கொள்பவர்களை ஏமாளி என எண்ணாதீர்கள்..! அவர்கள் உங்களை இழக்க விரும்பாதவராக இருக்கலாம்..!! இதில் சொன்ன விஷயத்தை நாம் நம் அனுபவத்தில் கடந்திருப்போம் ஆனால் நினைவில் வைத்திருக்க மாட்டோம் காரணம் மறதி என்று சொல்ல முடியாது உண்மையான காரணம் மதிப்பு நாம் கொடுக்கவில்லை என்பதுதான் என்ன செய்வது நம்மை இழக்க விரும்பாதவரிடம் கூட நம்மால் உண்மையாய் இருக்க முடியாத அளவு அறிவின் தாக்கம் பெருகிவிட்டது என்று தான் சொல்ல வேண்டியுள்ளது

26 – ந்தேதியில் பிறந்தவர்களின் பலன்கள்

சனியின் ஆதிபத்தியமுடைய எண் இதுவாகும் பலவித இன்னல்களுக்கு இடையே சிறிது சிறிதாகத்தான் முன்னேற்றம் பெறுவார்கள். இள வயதில் கஷ்டமான சூழ்நிலையை உடையவர்கள். குறைவான கல்விப் பயிற்சி உடையவர்கள். என்றாலும் அனுபவக் கல்வி அதிகமாக உடையவர்கள், எப்படியும் பிரபலமடைந்து உயர்ந்து விடுபவர்கள் எனலாம்.

25 – ந்தேதியில் பிறந்தவர்களின் பலன்கள்.

கேதுவின் ஆதிபத்தியமுடைய எண் இதுவாகும். விட்டுக்கொடுக்கும் மனப்பக்குவம் உடையவர்கள். சுருக்கமாகச் சொல்லுவதென்றால் தியாகசீலர் என்றுதான் சொல்லவேண்டும். பொது நலத்தில் அதிக அக்கறையும், தொண்டு புரிபவர்கள் அரசியல் பதவிகளைப் பெற்று நாட்டுக்காக நல்ல காரியங்களையும், திட்டங்களையும் செயல்படுத்துபவர்கள். ஆன்மீக ஈடுபாடுகள், விசேஷ ஞானசித்தி உடையவர்கள்.

அக்கறை

அக்கறை என்பது உண்மையானதாய் இருந்தால் அது கோபப்படாது உதவி செய்து வழி காட்டும். ஆனால், நிஜத்தில் அக்கறை இருப்பதாய் நாம் நினைப்பவர்களிடம் அதிக கோபம் வருகிறதே என்ன காரணம் இதற்க்கு எனக்கு தெரிந்த ஒரே பதில் அது அக்கறை உருவத்தில் இருக்கிற ஆசை. அந்த ஆசை அன்பாக பரிணாமம் அடையவில்லை என்பது தான். ஆசை அன்பாக பரிணாமம் அடையும் போது அங்கு அக்கறை உண்மையாய் இருக்கும். உண்மையான அக்கறை கோபப்படாது. அது உதவி செய்து வழி காட்டும்.…

முக்கியத்துவம்

உறவுகளுக்கு முக்கியத்துவம் தருவதை விட…. முதலில் உன் உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடு… ஏனெனில் உன் வாழ்வை தீர்மானிப்பது உறவுகளல்ல உன் உணர்வுகள் தான்….!!! இது உறவு வேண்டாம் என்ற பொருளில் சொல்லப்பட்டதல்ல உறவுகள்  உணர்வோடு இருக்க  வேண்டும் என்ற பொருளில் சொல்லபட்டது  தற்காலத்தில் உள்ள உறவுகள் பெயரில் மட்டுமே இருக்கிறது உணர்வில் இல்லை தாய், தந்தை, மகன், மகள், கணவன், மனைவி, அண்ணன், தம்பி, இந்த வார்த்தைகளின் உணர்வுகளை தற்போதைய மனித சமுதாயம் 75 சதவிகிதம் தொலைத்து…

நம்பிவிடாதீர்கள்..!

யார் எதை சொன்னாலும் நம்பிவிடாதீர்கள்..! சோதித்துப் பாருங்கள், அதை பற்றி ஆழமாக சிந்தித்து பாருங்கள்.. உங்கள் புரிதலுக்கு உட்படவில்லையெனில்.. அது எதுவும் உங்களுக்கு உதவப்போவதில்லை. எப் பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு

24 – ந்தேதியில் பிறந்தவர்களின் பலன்கள்.

 சுக்கிரனின் ஆதிபத்தியமுடைய எண் இதுவாகும்.  இவர்களுடைய முன்னேற்றம் மெதுவாக இருந்தாலும் திடமான, நல்லநிலையைப் பெறுவார்கள். கருணை உடயவர்கள். பிறரின் உதவியால் நல்ல ஸ்தானம் பெற்றிடுவார்கள். அரசாங்கத்தின் ஆதரவு கிடைக்கும். அடக்கமும், அமைதியும் கொண்டவர்கள், சகல வசதிகளையும் சுயமுயற்சியால் ஏற்படுத்திக் கொள்வார்கள். இனிய இல்லறம் இவர்களுக்கு உண்டு.

சிந்திக்க செயல்படுத்த 5 மூல மந்திரம்

உங்கள் இஷ்ட தெய்வம் எதுவாகவும் இருக்கலாம். அதன் பெயரை ஆக்ஞா சக்கரம் திறக்கப்பட்டபின் அழுந்தச் சொல்லுவது மூல மந்திரம் எனப்படும். இந்த இஷ்ட தெய்வம் அடிமனதிற்கு எட்டக் கூடிய சூக்கும சரீரத்தில் குடி கொண்டிருக்கும். மனோசக்தி பயிற்சி பெற்றவர்களிடமிருந்து சக்திக் கனல் எழுந்து பெருகி வரும். இவர்களுக்கு, சூட்சுமமமான அடி மனத்தொடர்பு சாதாரணமாக உண்டு. அந்த அடிமனத் தொடர்பும், சக்திக் கனலும் சந்திக்கும் இடத்தில் சர்வ சக்தி மயமான ஆற்றல் முழு உருவெடுத்து இறங்குகிறது.

முந்தைய இன்றைய தலைமுறை

முந்தைய தலைமுறைக்கும்,  இன்றைய தலைமுறைக்கும் ஒப்பிட்டுப் பார்த்தால் எத்தனையோ மாறுதல்கள் ஏற்பட்டு இருக்கிறது. மாறுதல்கள்  காலத்தை மீறி நின்ற போதும், அண்மை கால மாறுதல்கள் விண்கல வேகத்தில் ஏற்பட்டுள்ளது. இந்த நிலமைக்கு காரணம் அதித விஞ்ஞான வளர்ச்சியுமாயும் இருக்கலாம் இந்த வளர்ச்சியின் காரணமாக ஏற்பட்டுள்ள நெருக்கடிகளும் மாறுதல்களும், சுயவாழ்க்கையை கூட யோசிக்க முடியாத நிலைக்கு தள்ளிவிடப்பட்டுவிட்டது . இதை நாம் சிறிது ஆழ்ந்து கண்டிப்பாய் சிந்திக்கவேண்டும். சந்தோஷத்திற்கு, மன நிம்மதிக்கு, மனமகிழ்ச்சிக்கு, மனநிறைவுக்கு, எதிர்மறையான வளர்ச்சியால் என்ன…

23 – ந்தேதியில் பிறந்தவர்களின் பலன்கள்.

புதனின் ஆதிபத்தியமுடைய எண் இதுவாகும். சமுதாயத்தில் உயர்ந்த செல்வாக்கு உடையவர்கள். அரசாங்கத்தில் புகழ் கௌரவம் ஏற்படும். இவர்கள் வாழ்க்கையில் மிகவும் உயர்ந்த ஸ்தானத்தில் இருப்பார்கள். மற்றவர்கள் புகழும் அளவில் சகல சம்பத்தும் பெற்று ராஜயோகத்தில் இருப்பார்கள் கணித, விஞ்ஞான, வியாபார, வல்லவர்கள். சாஸ்திர அறிவு நிரம்பியவர்கள்.

ஸ்தூல பரு உடல்

ஸ்தூல உடல், சூட்சும ஆவி உடல், அதி சூட்சும அருள் உடல், காரண உடல், மகா காரண அருவசக்தி இவைகளில் அன்னமய கோசமாகிய ஸ்தூல பரு உடலைத் தவிர மற்ற நிலைகளை மூலாதாரம் எனப்பட்ட வாலறிவால்  தான் பெறமுடியும்.

22 – ந்தேதியில் பிறந்தவர்களின் பலன்கள்.

ராகுவின் ஆதிபத்தியமுடைய எண் இதுவாகும். சிக்கலான வாழ்க்கயை உடையவர்கள். பலவிதத்தில் ஆற்றலும், திறமையும் அமைந்தவர்களே என்றாலும் நேர்மையான பாதையில் நடப்பவர்கள். எனவே தாமாக வரும் தீய நண்பர்களையும், பங்குதாரர்களையும் விட்டு விலகி இருப்பதே மிகவும் நல்லது. பல பேருக்கு வேலை கொடுத்து நடத்தும் தொழிலில் அதிக வெற்றியுடையவர்கள்.

நாம் வாழுகின்ற சுற்று புறம் கலாசாரம் 5

அமைதியை தேடும் மனிதன் முதலில் புரிந்துகொள்ள வேண்டியது ஒன்று அன்பு அடுத்தது மரணம் இவை இரண்டையும் மனிதன் புரிந்துகொள்ளும் போது அவனுக்கு பலவிஷயங்கள் தெரிய தொடங்கும் அதில் சில விஷயங்கள் புரியத்தொடங்கும் முக்கியமாக நாம் கவனிக்க வேண்டியது என்னவென்றால் சிறுவயது முதலே போட்டி மனப்பான்மையோடு வாழ பழக்கப்படுத்தியுள்ளோம் இதை நாம் நன்றாக புரிந்துகொள்ள வேண்டும். திறந்தமனதோடு ஒப்புக்கொள்ளவும் வேண்டும் போட்டி என்றாலே வெற்றி என்பது இலக்காகி விடுகிறது ஏதாவது ஒரு பலவீனமான சந்தர்ப்பத்தில் நாம் வன்முறையைகைக்கொள்ள தூண்டப்படுகிறோம்…

21 – ந்தேதியில் பிறந்தவர்களின் பலன்கள்.

குருவின் ஆதிபத்தியமுடைய எண் இதுவாகும். ஆதாயம் இல்லாமல் எந்த செயலிலும் ஈடுபடவே மாட்டார்கள். வருமானம் வருகிறது என்றால் எந்தப் பிரச்சனையிலும் ஈடுபட்டு தொந்தரவுகளைத் தேடிக்கொள்வர்கள். பல தோல்வியைக் கடந்து பிறகு வெற்றியைப் பெற்றிடுவார்கள். ஆனாலும் வசதியான வாழ்வை வாழ்வார்கள் என்று சொல்ல வேண்டும்.

நாம் வாழுகின்ற சுற்று புறம் கலாசாரம் 4

தேசியத்தில் பார்த்தால் மதம், அரசியல் ,அந்தஸ்து ,போன்றவற்றால் மக்கள் பிரிந்தும் தங்களை தொலைத்தும் இருக்கிறார்கள் தான் தன்னை இழந்துவிட்டோம் தன்னை தொலைத்துவிட்டோம் என்ற சிந்தனை கூட மக்களுக்கு இல்லை பாவம் என்ன செய்வது அரசியலை சார்ந்திருக்கும் அரசியல் வாதிகளாலோ மதத்தை சார்ந்திருக்கும் மதகுருமார்களாலோ வியாபாரத்தை சார்ந்திருக்கும் வியாபாரிகளாலோ தனி திறமையாளர்களாலோ மிக பெரிய ஆராய்ச்சியாளர்களாலோ இதுநாள் வரையில் மக்களுக்கு சந்தோஷமாக வாழ்வதற்குண்டான கல்வியை சுதந்திரத்தை தர முடியவில்லை இனி இவர்களை நம்பி பலனில்லை அதை நாமே தேடி…

நாம் வாழுகின்ற சுற்று புறம் கலாசாரம் 3

பிறகு அதற்குரிய தன்மையை நாம் நமக்குள் உருவாக்கிக்கொண்டு அந்த பணியில் இறங்குவோம் இங்கு அதற்குரிய தன்மைகள் என்பதன் பொருள் என்னவென்றால் உணர்ச்சிபூர்வமாக இல்லாதிருத்தல் பாரபட்சமற்ற நோக்கு எதையும் சாரத சுதந்திரமான தெளிவான ஒரு நோக்கு எதையும் உள்ளது உள்ளபடி கண்டறிவது இது முதல் நிலை அடுத்து உள்ளது உள்ளபடி புரிந்து கொள்வது இது இரண்டாவது நிலை நமது கருத்துக்களை பிறருக்கு தெரியப்படுத்துவது என்றால்என்ன என்பதை முதலில் நாம் சந்தேகமில்லாமல் புரிந்துகொண்டிருக்கவேண்டும் நமது கருத்துக்கள் பிறருக்கு தெரியப்படுத்துவதற்கு நாம்…

20 – ந்தேதியில் பிறந்தவரிகளின் பலன்கள்.

சந்திரனின் ஆதிபத்தியமுடைய எண் இதுவாகும். பொதுநலத்தில் அதிக ஈடுபாடு கொண்டவர்கள், சுயநலத்தை நினைத்தாலே இவர்களுக்கு மற்றவர்களின் மேல் வெறுப்பு தானாக ஏற்படும். பெரும்பாலும் இவர்கள் பொதுச்சேவை புரிவதால் இவர்களை மகான் என்றும், மேதை என்றும் போற்றுவார்கள். மற்றவர்களுக்கு வழிகாட்டும் தலைமை ஸ்தானம் பெறுவார்கள், பெருமையும், புகழும் உடையவர்கள். ஸ்திரபுத்தி இருக்காது ஏற்றத்தாழ்வுகள், பிணி, நலி, கண்டங்கள் வாழ்வில் பல முறை குறுக்கிடும்.

19 – ந்தேதியில் பிறந்தவர்களின் பலன்கள்.

சூரியனின் ஆதிபத்தியமுடைய எண் இதுவாகும். பிடிவாத குணம் உடையவர்கள். விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை என்பது சிறிதளவுகூட இவர்களிடத்தில் இருக்காது. எனவே, இக்குணங்களை விட்டுவிட்டால்இவர்கள் வாழ்க்கையில் சிறப்பான நல்ல முன்னேற்றத்தை முழுமையாகப் பெற்றிடலாம்  என்பது சிறந்த வழியாகும். எனவே அனுசரித்துப் போகும் குணம் அவசியம் தேவையாகும்.

நாம் வாழுகின்ற சுற்று புறம் கலாசாரம் 2

நமது வாழ்க்கை கடினமாயும், குழப்பங்களும் , எதிர்மறை நிறைந்ததாயும் இருக்கிறது.  தனி மனித வாழ்க்கை மட்டுமல்லாது பொது வாழ்க்கையும் கூட அப்படி தான் இருக்கிறது எங்கு நோக்கினும் அழிவு கோட்பாடுகள் நாளுக்கு நாள் மாறிக்கொண்டே வருகின்றது எதற்கும் எதிலும் மதிப்போ ஆதாரமோ நம்பிக்கையோ இல்லை அது மதமாகட்டும் நிறுவனமாகட்டும் தத்துவமாகட்டும் அரசியல் ஆகட்டும் இப்படிபட்டக் குழப்பம் நிறைந்த உலகில் நாம் எப்படி வாழ்வது என்று நாம் சிந்தித்தே ஆக வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம் இத்தனைக்கும் காரணம் சரியான…

நாம் வாழுகின்ற சுற்று புறம் கலாசாரம் 1

அன்பானவர்களுக்கு நான் படித்த சிந்தித்த விஷயங்களை பகிர்ந்துகொள்கிறேன் மனித பிறவிகளாகிய நாம் ஒரு வன்முறை சமுதாயத்தை உருவாக்கியுள்ளோம் இதை தான் இத்தனை ஆண்டுகளாக உருவாக்கியுள்ளோம் என்பதை கூட நாம் இன்னும் உணரவில்லை இந்த நிலைக்கு வளர்ச்சி என்று பெயரிட்டு அழைக்கிறம் நாம் வாழுகின்ற சுற்று புறம் கலாசாரம் எல்லாம் நமது முயற்சியின் பலனாகும் இதற்க்கு பின்புலமாக இருப்பது கடின பிரயத்தனங்கள் நமது வேதனைகள் திகைப்பூட்டும் கொடுமைகள் தான் அமைத்துள்ளன. இந்த உலகத்தில் இப்போது என்ன நிகழ்ந்து கொண்டிருக்கிறது…

18 – ந்தேதியில் பிறந்தவர்களின் பலன்கள்.

அங்காரகனின் ஆதிபத்தியமுடைய எண் இதுவாகும் தங்களுக்கு என்று சில கருத்து, கொள்கைகளை உடையவர்கள். என்றாலும் மாறுபட்ட கருத்துடையவர்களையும் தன்னுடைய இஷ்டத்துக்கு மாற்றிவிடுவார்கள். தவறிக்கூட தமது கருத்து இதுதான் என்று வெளிப்படையாகச் சொல்லமாட்டார்கள். தமக்கு ஆகாதவர்களை சமயம் பார்த்து பழி தீர்த்துக்கொள்ளும் சுபாவம் உடையவர்கள். இவர்களுடைய செயல்கள் பிறருக்குப் புரியாத புதிராகவே இருக்கும், என்றாலும் தாமாக தீங்கு செய்யமாட்டார்கள்.

17 – ந்தேதியில் பிறந்தவர்களின் பலன்கள்.

சனியின் ஆதிபத்தியமுடைய எண் இதுவாகும் பணம் சம்பாதிப்பதுதான் இவர்களது லட்சியம். எனவே எந்த வழியாக இருந்தாலும் பரவாயில்லை என்ற குறிக்கோள் கொண்டவர்கள். செல்வச் செழிப்புடன் தமது வாழ்க்கையை அமைத்துக் கொள்வார்கள். என எப்படியாவது செல்வ வளத்தைத் தேடி அடைந்திடுவார்கள்.